மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுவரும் இணைப்புப் பாலத்துக்காக அமைக்கப்பட்ட இரும்புப் பாரம் தாங்காமல் திடீரென இரும்புச் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 4 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.