கோவை கார் வெடிப்பு சம்பவம் மேலும் 4 பேர் கைது

50பார்த்தது
கோவை கார் வெடிப்பு சம்பவம் மேலும் 4 பேர் கைது
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 21 இடங்களில் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். ஆறு லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், இரண்டு எஸ்டி கார்டுகள், மூன்று ஹார்டு டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி