மகாராஷ்டிராவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஜல்னாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 22 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.