மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் அருகே ‘ஆடலும் பாடலும்’ நிகழ்ச்சி பார்த்த 12ஆம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கோவில் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில் பாண்டி (17) என்ற மாணவர் கலந்துகொண்டார். அப்போது அவர், மேடை அருகே நின்று ‘ஆடலும் பாடலும்’ நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒலிபெருக்கி & மின் விளக்குகளுக்காக அமைத்திருந்த மின் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, பாண்டி மீது அந்த மின் ஒயர் பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.