சிறுமி பாலியல் வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை

585பார்த்தது
சிறுமி பாலியல் வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி மாடுகளை மேய்க்கச் சென்றபோது மாயமானார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொன்றது தெரியவந்தது. இந்த வழக்கில் கன்ஹா மற்றும் காளு ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். பில்வாரா மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம், இந்த வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி