கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

இதில் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி