உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரேகா (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர், தனது கள்ளக்காதலான உமேஷ் (30) என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், ரேகா மீட்டு குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். தவறை உணர்ந்த ரேகா, உமேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த உமேஷ், ரேகாவின் வீட்டிற்குள் சென்று தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ரேகாவை தீயிட்டு கொளுத்தியுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.