தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

71பார்த்தது
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த பகுதிக்கும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.