ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை இந்த வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள் என 120 வகையான பொருட்களை அடையாளம் காணும் திறனை பெற்றுள்ளார். இதுகுறித்த வீடியோவை குழந்தையின் தாய் ஹேமா நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். வீடியோவை கண்ட அந்த குழுவினர், குழந்தை உலக சாதனைக்கு உரியவள் என கூறி சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது. இதனால் பிறந்த 4 மாதத்தில் உலக சாதனை என்ற சிறப்பை அந்த குழந்தை பெற்றுள்ளது.