திருவள்ளூர்: பொன்னேரி அருகே வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினி என்பவர் தனது கணவர் குளிப்பதற்காக தண்ணீரை சுட வைக்க பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டரை வைத்து ஆன் செய்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த அவரை, மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், வரும் வழியிலேயே அஸ்வினி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.