போக்குவரத்தை எளிதாக்க சாலையின் இடதுபுறத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற போக்குவரத்து விதியை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அக்காலக்கட்டத்தில் அவர்கள் வகுத்த இடதுபுறம் நடக்க வேண்டும் என்ற விதியால், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வண்டியின் வலது பக்கம் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. காலப்போக்கில், குதிரை வண்டிகள் கார்களாக மாற்றப்பட்டதால், ஓட்டுநருக்கு தெளிவான பார்வையை உறுதி செய்வதற்காக, ஓட்டுநர் இருக்கை வலதுபுறத்தில் இருந்தது. ஆகையால், ஸ்டியரிங் வீல் வலப்பக்கம் அமைக்கப்பட்டது.