"அண்ணாமலை கூறியது பொய்"

75பார்த்தது
"அண்ணாமலை கூறியது பொய்"
தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது திமுக அரசு என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு உண்மை நிலை சரிபார்ப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டியஞ்சலி விழாவை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டியுள்ள இந்திய தொல்லியல் துறை. தஞ்சை பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால் தான் 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டிய அஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி