விவசாயி உயிரிழப்பு.. 1 கோடி ரூபாய் நிவாரணம்

79பார்த்தது
விவசாயி உயிரிழப்பு.. 1 கோடி ரூபாய் நிவாரணம்
பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த பொழுது போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டுகள் வெடித்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்கரன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பகவத் மான் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி