கோடைகால பயிற்சியில் பங்கேற்றவர்களுக்குபரிசு வழங்கப்பட்டது

74பார்த்தது
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ / மாணவியர்களுக்கு பரிசு பொருட்களும், பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
-----

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயது உட்பட்ட (Under 18) மாணவ / மாணவியர்களுக்கு 29. 04. 2024 முதல் 13. 05. 2024 வரை 15 நாட்கள் காலை 6. 30 முதல் 9. 00 மணி வரை மற்றும் மாலை 4. 00 மணி முதல் 6. 30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இப்பயிற்சி முகாமில் வளைகோல்பந்து, டென்னிஸ், தடகளம், கால்பந்து, மற்றும் குத்துச்சண்டை, போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் முட்டை/ பிஸ்கட் வழங்கப்பட்டது.

13. 05. 2024 அன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. சே. குமரமணிமாறன் அவர்களால் 76 மாணவர்கள் மற்றும் 22 மாணவிகள் என மொத்தம் 98 நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் மற்றும் டி. சர்ட் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :