விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் மதிவாணன் ஐ. பி. எஸ் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தனிப்படை போலீசார் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்படும் புகையிலை, குட்கா பொருட்கள் மற்றும் மதுபான பாடல்களை அதிக அளவில் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பகுதியில் அருப்புக்கோட்டை ஏ. எஸ். பி மதிவாணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதி வேகமாகவும், சந்தேகப்படும் வகையில் வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
உடனே அவர்களை விசாரித்த போது அருப்புக்கோட்டை, கிழக்குத் தெருவை சேர்ந்த பாஜக நகர மகளிர் அணி தலைவரின் கணவருமான பாஜக நிர்வாகியான ஜெயபிரகாஷ் (47), மேல தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (48) மற்றும் விஜயகுமார் (53) என தெரிய வந்தது.
உடனே காரியாபட்டி காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் கர்நாடக மாநில மதுபான பாடல்களை கடத்தி சென்ற பாஜக நிர்வாகி உட்பட மூன்று பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 29 மதுபான பட்டியல்கள் மற்றும் 3500 ரூபாயை பறிமுதல் செய்து ஏ. எஸ். பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.