காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி கிராமத்தில் முதல் தெய்வமாக கருதப்படும் அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மங்கல இசை விக்னேஸ்வரர் பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப பூஜை, ஸ்பர்ஷாஹீதி, பிம்பா ஹீதி, யாக சாலையில் திரவியா ஹீதி, பூர்ணா ஹீதி நடைபெற்று கடங்கள் புறப்பாடு ஆகி வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
பின்னர் கற்ப கிரகத்தில் இருக்கும் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.