தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தந்தையுமான அமரர் வே. தங்கபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.,13) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினார்கள். மேலும் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் பிறந்த தினத்தை முன்னிட்டு காரியாபட்டி வே. தங்கபாண்டியன் பிறந்தநாள் குழுவினர் சார்பாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.