சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ. 5, 00, 000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.
2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் வரவேண்டிய கடைசி நாள் 20. 12. 2024 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.