பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2025-ஆம் ஆண்டு மார்ச் -8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 2025-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 31. 12. 2024. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 3 நகல்கள் அனுப்பிட வேண்டும். கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர். 04562- 252701 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.