வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியார் அணை, கோவிலாறு அணை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் தானிப்பாறை அடிவாரப் பகுதிகளிலும் கன மழை பெய்ததால் நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மலையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.