விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் மெயின் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல நடை பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பு
சாத்தூர் நகர் பகுதியில் சிதம்பரம் நகர் முதல் கிருஷ்ணன் கோவில் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மெயின்
செல்கிறது. மெயின் சாலையில் காவல் நிலையம் , வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், பொதுப்பணித்துறை அலுவலகம், அரசு மருத்துவ மனை, அரசு உதவி பெறும் தனியார் உயர் நிலைப்பள்ளிகள், பேருந்து நிலையம் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் உள்ளது. அதனால் சாத்தூர் நகர் பகுதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வரும். மேலும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து கொண்டே இருப்பதால் போக்க வரத்து நெரிசலும் இருந்து கொண்டே இருக்கிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும்
நோக்கத்தில் நெடுஞ்சாலை துறையினர் மெயின் சாலையின் இரு பகுதிகளையும் விரிவாக்கம் செய்வதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது சாலை விரிவாக்கம் செய்வதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்காக நடை பாதை அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.