ராஜபாளையம் இஜ்திமா மாநாடு நடைபெற்றது

52பார்த்தது
ராஜபாளையம் இஜ்திமா மாநாடு நடைபெற்றது
ராஜபாளையம் ஜாஸ் மஹாலில் பெண்கள் இஜ்திமா மாநாடு நடைபெற்றது.
ராஜபாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை உறுப்பினர் அஸார்தீன் மாநாட்டை தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட தலைவர் முஹம்மதுஷபீக் தலைமை வகித்து பேசினார். மேலப்பாளையம் அல் இர்ஷாத் அரபிக் கல்லூரி பேராசிரியை சிராஜ் பாத்திமா, அப்துர்ரஹ்மான் ஆகியோர் பேசினர். விசாரணை கைதிகளாக பல வருடங்களாக வாழ்நாளை சிறையில் கழித்து வந்த அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்த முதல்
அமைச்சருக்கு நன்றி
தெரிவிப்பது. சம்மந்தபுரம் 11-வது வார்டு அப்துல்கலாம் நகரில் புதியரேஷன் கடை கட்டி நீண்ட காலம் ஆகியும் இன்னும் திறக்கபடாமலே உள்ளது. அந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் காலதாமதமில்லாமல் புதிய ரேஷன் கடையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர காண்டு வர வேண்டும். 9, 10, 11. ஆகிய மூன்று வார்டுகளிலும் பல தெருக்களில் சாலை வசதிகள் இல்லாமலும், பல இடங்களில் சாலைகள் குண்டு குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் முகம்மது நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி