இராஜபாளையம்: தேசிய கண்தான இரு வார விழா..

50பார்த்தது
இராஜபாளையம்: தேசிய கண்தான இரு வார விழா..
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து நேற்று(செப்.10) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் Dr. பாபுஜி ஆலோசனைப்படி தேசிய கண் தான இரு வார விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை மருத்துவர் டாக்டர். மாரியப்பன் தலைமை தாங்கினார் செவிலியர் கண்காணிப்பாளர்கள் ரெஜினா, குருலட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர் சித்ரா பேசும் போது உயிருடன் இருக்கும் போது ரத்ததானம், இறந்தபின் கண்தானம் செய்யவேண்டும். கண்தானம் செய்வதால் கருவிழி பாதிப்பு அடைந்த கண் பார்வையற்ற நான்கு பேருக்கு பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆகவே கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் தற்போது இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கண் தானம் சிறப்புடன் செயல்பட்டு பார்வை இழப்பை தடுப்பதில் முன்னணியில் இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கண்தானம், உடல் தானம் செய்ய முன்வர வேண்டும் என கண் தான விழிப்புணர்வு பற்றி பேசினார்கள்.

தொடர்புடைய செய்தி