சாலைகளில் சேதம் அடைந்து வரும் பாதாள சாக்கடை மூடிகள்

80பார்த்தது
சாலைகளில் சேதம் அடைந்து வரும் பாதாள சாக்கடை மூடிகள்
ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த ஆட்சியாளர்கள் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் என பணிகளைத் துவங்கி பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை இரண்டு பணிகளும் முடிவடையாத நிலையில் இருந்து வருகிறது தற்போது தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் நகர் பொதுமக்கள் புகார் கூறுகையில் திட்டப் பணிகள் முடிவடையாது நிலையில் பணிகள் தங்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கும் வரை திட்டப் பணியின் ஒப்பந்த காரர்கள் பணிகளை மேற்கொள்வார்கள் என பதில் அளித்து வருகின்றனர் ஆனால் பல இடங்களில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய்கள் உடைந்தும் பாதாள சாக்கடை தொட்டிகள் மற்றும் மூடிகள் சேதம் அடைந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருந்து வருகிறது ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டும் என நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி