விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தும்மகுண்டு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ. 3. 10 இலட்சம் மானியத்தில் 3 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
மேலும், பந்தல்குடி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், ரூ. 50 ஆயிரம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,
அதனை தொடர்ந்து, பெரிய நாயகிபுரம் ஊராட்சியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6. 15 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதையும்,
பின்னர், கோவிலாங்குளம் ஊராட்சியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5. 72 இலட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.