அரசு கல்லூரி காலிப்பணியிடங்கள் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்

533பார்த்தது
அரசு கல்லூரி காலிப்பணியிடங்கள் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 புதிய அரசு கலை அறிவி யல் கல்லூரிகளை அரசு தோற்றுவித்து ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை, அறிவியல் கல்லூ ரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் இதுநாள் வரையிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஜனவரி 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பேராசிரியைகளிடம் கையொப்பம் பெறும் இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது, அதன்படி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் கையொப் பம் பெறும் இயக்கம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கல் லூரி ஆசிரியர் கழகத்தின் விழுப்புரம் கிளை தலைவர் வெங்கடே சன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் தண்டாயுதபாணி, கூட்டு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விஜயரங்கம், இணை செயலாளர் ஜோதிப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கையொப்பம் பெற்றனர்.

டேக்ஸ் :