ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சுங்கனா மகன் பவன்கல்யாண், 26; இவரது நண்பர் பண்டரிநாதன் மகன் ஸ்ரீரங்கரெட்டி, 29; திருவண்ணாமலையில் வேலை செய்யும் இருவரும், கடந்த 13ம் தேதி பைக்கில் விழுப்புரத்திற்கு புறப்பட்டனர்.
சோழகனூர் அருகே வந்தபோது, பைக்கை ஓட்டி வந்த பவன்கல்யாண் தூக்க கலக்கத்தால் சாலையோர புளிய மரத்தின் மீது மோதினார். இதில், தூக்கி வீசப்பட்ட இருவரில், பவன்கல்யாண் சம்பவ இடத்திலே இறந்தார். பைக் பின்னால் அமர்ந்திருந்த ஸ்ரீரங்கரெட்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.