கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய ஆட்சியா்

64பார்த்தது
கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய ஆட்சியா்
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபுசமுத்திரத்தில் செயல்படும் கருணைக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியா் சி. பழனி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அங்கு தங்கியுள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி 2024 ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடினாா்.

கருணைக்கரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும், வழங்கப்படும் உணவு, குடிநீா் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குழந்தைகள் இல்லம் நடத்துவதற்குத் தேவையான அனைத்து சான்றுகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து குழந்தைகளின் கல்வி நிலை, உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அங்கு தங்கியுள்ள குழந்தைகளுடன் சோந்து கேக் வெட்டி, புத்தாண்டு கொண்டாடினாா். குழந்தைகளின் லட்சியக் கனவுகளைக் கேட்டறிந்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பாா்கவி, இல்லக் காப்பாளா் எலிசபெத் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி