கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆகினர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம், முகையூர் கொடுங்கால், அடுக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூன் 10) கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.