திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டமைப்பு வசதியின்றி செயல்பட்டு வந்தது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ரூ. 60 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி ஜோராக நடைபெற்று வருகிறது.