சிவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை

52பார்த்தது
திண்டிவனத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மூலவர் எமதண்டீஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஐந்து தலை நாக கிரீடத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவர் எமதண்டீஸ்வரருக்கு மகா தீபாராதனையும், சோட சுபசார பூஜையும் செய்யப்பட்டது. அதேபோல் திரிபுரசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதே போல் வெள்ளிமேடு பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை திருநாகேஸ்வரர் சிவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவர் திருநாகேஸ்வரர் சந்தன காப்பு அலங்காரத்தில் அழகாக காட்சி அளித்தார். அம்மன் திரிபுரசுந்தரிக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவருக்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி