23. 86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது நிறுவன தலைவர்

71பார்த்தது
23. 86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது நிறுவன தலைவர்
விழுப்புரம் ரோஸ் மலர் டெவலப்மெண்டல் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி நிறுவனம் மூலம் 5, 372 உறுப்பினர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தலைவர் பிரபலா ஜெ ராஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரோஸ் மலர் டெவலப் மெண்டல் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி நிறுவனத்தின் நோக்கம், உறுப்பினர்களின் பொருளாதார, சமூக நலனை மேம்படுத்துதல், சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட கூட்டுறவு கொள்கை களை மேம்படுத்துதல், விவசாய தொழிலை மேம் படுத்தி உற்பத்தியை வளர்ச் சியடைய செய்வது ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது தமிழகத்தில் 37 ஆயிரத்து 491 உறுப்பினர்களும், புதுச்சேரியில் 3, 206, கர்நாடகாவில் 972, கேரளாவில் 1, 268, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் 1, 421 உட்பட 44 ஆயிரத்து 358 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த உறுப்பினர்கள் பங்கு தொகை 1. 65 கோடி ரூபாய். சேமிப்பு தொகை 7. 96 கோடி ரூபாயில் அவர்களின் தொழில் அபிவிருத்திக்கு திரும்ப பெற்றது 11. 78 கோடி ரூபாய் ஆகும். தொடர் வைப்பு நிதி 1. 55 கோடி ரூபாய், வைப்பு நிதி 3. 18 கோடி ரூபாய் சேர்த்து தற்போது வரை 23. 86 கோடி ரூபாய் கடனை 5, 372 உறுப்பினர்கள் பெற்று பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதிகபட்ச வட்டியாக வைப்பு நிதிக்கு 12. 50 சதவீதம், தொடர் வைப்பு நிதிக்கு 11 சதவீதம், சேமிப்புக்கு 7. 50 சதவீதம் மற்றும் சிறப்பு சேமிப்பிற்கு 8. 50 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி