விவசாயி வீட்டில் பாத்திரங்கள் திருட்டு போலீசார் விசாரணை

57பார்த்தது
விவசாயி வீட்டில் பாத்திரங்கள் திருட்டு போலீசார் விசாரணை
மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தொப்ளான் மகன் பூங்காவனம் (வயது 52), விவசாயி. தற்போது இவர் சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பூங்காவனம் சிறுதலைப்பூண்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து 4 அதில் திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தவைத் திருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 1. 5 லட்சம் மதிப்புள்ள பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டில் பணம் மற்றும் பாத்திரங்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் வளத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி