வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

85பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வேலூர் மாநகராட்சி முத்து மண்டபம், அல்லாபுரம், சத்துவாச்சாரி மற்றும் பலக்கானுர், முத்தம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

11ம் தேதியான இன்று முதல் 13 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் வழங்க இயலாது.

ஆகவே வேலூர் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தைக் கொண்டு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி