வாணியம்பாடி அருகே டிப்பர் லாரியை சிறைப்பிடித்த கிராம மக்கள்!

53பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் அரசு சார்பில் விவசாய நிலங்களுக்கு ஏரியிலிருந்து மண் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி யுவராஜ் அனுமதி வழங்காத விவசாயிகள் பெயரில் கள்ளத்தனமாக ஏரியிலிருந்து மண் கடத்தி வருவதாக கூறி கிராம மக்கள் சிலர் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அனுமதி இல்லாமல் ஏரியிலிருந்து மண் கடத்திச் சென்ற லாரியிலிருந்த மண்ணை கீழே கொட்டி விட்டு லாரியை விடுவித்தனர் இதனால் அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you