வாணியம்பாடியில் சந்தனக்குட விழா எம்எல்ஏ தொடக்கி வைத்தார்!!

60பார்த்தது
வாணியம்பாடியில் சந்தனக்குட விழா எம்எல்ஏ தொடக்கி வைத்தார்!!
வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள தர்காவளாகத்தில் சந்தனக்குட விழா நிஷான் பாதிகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சையத் பிர்தோஸ் பாத்திமா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக உரூஸ் கமிட்டி சார்பில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேசம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் தலைவர் சையத் திலாவர் அலி, திருப்பத்தூர் அமானுல்லா காதிரி, தமிழ்நாடு தர்காக்கள் பேரவை மாநில செயலாளர் அமானுல்லா மற்றும் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் மாநில செயலாளர் சையத் அக்பர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சந்தனக்குட விழா முன்னிட்டு சந்தனகுட உரூஸ் ஊர்வலம் தாரை தப்பட்டை, மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நியூடவுன் தர்காவை ஊர்வலம் அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை மூத்தவல்லி சையதா யூஹா மர்யம் மற்றும் ஆஸ்தானயெ கவுஸியா உரூஸ் கமிட்டியினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you