நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் வேலு பங்கேற்பு.

78பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு பங்கு பெற்று முடிவுற்ற புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 2333 பயனாளிகளுக்கு ரூபாய் 35 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பள்ளி குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்திடும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் என்னும் உன்னத திட்டத்தினை துவக்கி வைத்து இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். காலை சிற்றுண்டி திட்டத்தை குறித்து அறிந்து கனடா பிரதமர் தங்கள் நாட்டிலும் காலை சிற்றுண்டி திட்டத்தினை செயல்படுத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி