வாலாஜா: காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா!

352பார்த்தது
வாலாஜா: காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா!
வாலாஜா டீரங்க் ரோட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருஷாபிஷேகம் நிகழ்வு வெகு விமர்சையாகநடைபெற்றது. முன்னதக ஆலயத்தில் விக்னேஸ்வர பூஜை கணபதி பூஜை புண்யாகவாசனம் ஆகிய விசேஷ ருத்திர ஹோமம் பூர்ணாவதி நடைபெற்று மங்கள தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காலையில் கருவறையில் உள்ள காசி விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் கூடிய மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் அக்னி குண்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட கலசத்தை மேளம் தாளம் முழங்க தலையில் சுமந்து கோவில் முழுவதும் புறப்பாடு நடைபெற்று கருவறையில் இருக்கும் அம்பாள் மற்றும் சிவபெருமானுக்கு புனித நீரை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த வருஷாபிஷேகம் விழாவில் வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :