ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் ஏப். 15ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுபவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9499055897, 9952493516 அழைக்கலாம்.