ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கண்காட்சி

62பார்த்தது
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கண்காட்சி
காட்பாடி ஒன்றியம் மேல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் பருவ விடுமுறையில் ஒவ்வொரு மாணவர்களும் குறைந்தபட்சம் ஒரு பாடம் சார்ந்த பொதுவான 10 செயல்பாடுகள் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்து 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுடன் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களை பாராட்டும் விதமாக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் கற்றல் சார் செயல்பாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள் செல் கோபுரம் கடிகாரம், களிமண் பொம்மைகள், விதை முளைத்தல், தேசத் தலைவர்களின் படங்கள், நீர்நிலைகள் போன்ற படைப்புகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில் காட்சிப்படுத்தி இருந்தனர். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் கலந்துகொண்டு மாணவர்களையும் பாராட்டினார். இதில் பெற்றோர்கள் முன்னால் மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மலர்கொடி ரெஜினா ராஜகுமாரி செயல்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி