வேலூர்: சிசிடிவியால் சிக்கிய பலே பைக் திருடன்

4445பார்த்தது
வேலூர் மாவட்டம் வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ். பி. மணிவண்ணன் உத்தரவிட்டார் இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் திருட்டு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி. எஸ். பி சரவணன் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோரது தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம், இந்த நபரின் உருவம் ஒன்றாக இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் திருவலம் குகைநல்லூரை கிராமத்தை சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனகளை திருடியதும் தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி