காட்பாடி அருகே பெரிய பட்டறை பகுதியில் உள்ள அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரிய பட்டறை பகுதியில் சாலை ஓரத்தில் கடைகள் உள்ளன அப்பகுதியில் உள்ள வெங்கடேசன், மற்றும் வினோத் என்பவருடைய இரண்டு சலூன் கடைகளும் வரலட்சுமி என்பவருடைய மளிகை கடையும் உள்ளது
நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றனர் இன்று காலை கடைகளை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
கடையில் சென்று பார்த்த போது நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரிய வந்துள்ளது
இந்த திருட்டு சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.