ஓடும் ரயிலில் மயங்கி விழுந்து வடமாநில பெண் பலி!

2246பார்த்தது
ஓடும் ரயிலில் மயங்கி விழுந்து வடமாநில பெண் பலி!
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம், பாணிதேவா பகுதியை சேர்ந்த சுசில் மின்ச் என்பவரின் மனைவி ஜுனா லக்ராமின்ச் (50). இவர் நுரையீரல் தொற்று காரணமாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை முடித்து மேற்குவங்க மாநிலம் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது கணவர் மற்றும் மகளுடன் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் பயணம் செய்த ரெயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது தனது மனைவி சுயநினைவு இல்லாமல் இருப்பதாக, ரயில்வே அலுவலர்களிடத்தில் சுசில் மின்ச் தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, ரெயில்வே டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்த போது ஜுனா லக்ராமின்ச் இறந்து விட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி