அரசு மருத்துவமனையில் இருதரப்பினரிடையே மோதல்

58பார்த்தது
அரசு மருத்துவமனையில் இருதரப்பினரிடையே மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ‌ எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில், அங்கே உறவினர்கள் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

உடனடியாக துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பிற்கிடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்து வைத்து பின்னர் மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி