போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு

81பார்த்தது
போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு
அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாநகர பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்தையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி