ஒடிசா மாநிலத்தின் அருகே இரண்டு புறநகர் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் சென்றுள்ளன. இதனை கவனித்த ஒரு ரயிலின் லோகோ பைலட், ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வராமல் இருக்க ஆங்காங்கே சிக்னல்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் ஊழியர்களில் கவனக்குறைவு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.