வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஏழுமலை (38). இவா், டீ குடிப்பதற்காக அந்தக் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா். வந்தவாசி-திண்டிவனம் சாலையில் சாலையோரம் நடந்து சென்றபோது திண்டிவனம் நோக்கிச் சென்ற ஆந்திர மாநில அரசுப் பேருந்து இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏழுமலை இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.