வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி

55பார்த்தது
வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி
மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சென்னை ஆா்விஎஸ் பத்மாவதி கட்டடவியல் கல்லூரியின் முதல்முறை வாக்காளா்களான 40 மாணவா்கள் பங்கேற்று மாதிரி வாக்களித்தனா்.

இதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலா்களாக வருவாய்த் துறையினா் அமர வைக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு மாதிரி வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வாக்குச் சாவடியினுள் அனுப்பப்பட்டனா். அங்கு அவா்கள் கை விரலில் மை வைக்கப்பட்ட பிறகு, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவா்கள் வாக்களித்தனா். உதவித் தோ்தல் அலுவலா் எஸ். சிவா, வட்டாட்சியா் ஆா். பொன்னுசாமி, தோ்தல் துணை வட்டாட்சியா் ஆா். சதீஷ் ஆகியோா் மாதிரி வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி. எல். சிவக்குமாா், எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக், செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா. சீனிவாசன், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஷாகீா்அகமத், பால்நவீன், கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி