இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உடன் வந்தவாசி நகர செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.