ஆகர்சன பைரவர் மற்றும் வராகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

66பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த காங்கேயனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சண்முக சுவாமிகள் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்சன பைரவர் மற்றும் வராகி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

போளூர் அடுத்த காங்கேயனூர் ஸ்ரீ ல ஸ்ரீ சண்முக சுவாமிகள் ஆசிரமத்தில் அமைந்திருக்கும் ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்சன பைரவர் மற்றும் வராகி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


காலை முதலில் விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாஜனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், முதலாம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் வராகி அம்மனுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் போளூர், காங்கேயனூர், பேட்டை, திரிசூர், வசூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி